நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்?

Loading...

Sunday, August 25, 2019

ஆரோக்கியமாக வாழ்வதற்கு மருந்துகள் தேவையில்லை! - அறிமுகம்


எனது பெயர் வினீத். முகநூலில் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விழிப்புணர்வு வினீத் என மாற்றிக்கொண்டேன். பிறந்தது நாகர்கோவிலில், குடிபெயர்ந்தது தேனியில். படித்தது பொறியியல் தகவல் தொழில்நுட்பம் (I.T) பிரிவில். ஐந்து வருடங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல நிறுவனங்களில் பணியாற்றினேன். வாழ்க்கைக்கு தேவையான பலவித அனுபவங்கள் கிடைத்தது ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. பின்னர் தேனியில் 2010 முதல் “ரேகா நெட் கார்னர்” என்னும் பெயரில் இணையத்தள மையத்தை ஆரம்பித்து (இன்றுவரை) வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். 

2010 இல் மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை வியாபாரம் பண்ணும் ஒரு தனியார் நிறுவனம் மூலம் எனக்கு ஆரோக்கியம் அறிமுகமானது. அதுநாள்வரை நான் அறிந்தது ஆங்கில மருத்துவத்தை மட்டும்தான். இந்த நிறுவனம் நடத்திய பல பயிற்சி வகுப்புக்களில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டேன். நோய்களைப்பற்றியும் அதற்கு தங்களிடம் உள்ள மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை வைத்து தற்காலிகமாக குணப்படுத்துவது பற்றியும் கற்பித்தார்கள். அறுவைசிகிச்சை இல்லாமல் அழுகிய கால்களை கூட காப்பாற்ற முடியும் என்கிற விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. மரணப்படுக்கையில் இருந்த சிலரையும் காப்பாற்றும் அளவிற்கு அந்த துறையில் கற்றுத் தேர்ந்தேன். 

குறுகிய காலத்திலேயே அந்த நிறுவனத்தில் மேனேஜர் நிலையை அடைந்தேன். ஆனாலும் பத்து நபர்களை பார்த்தால் ஐந்து நபர்களுக்கு மட்டுமே குணம் கிடைக்கும் என்கிற நிலை தான் இருந்தது. இந்த நிலை தான் என்னை “கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு” என்று அவ்வையார் கூறிய வாக்கியத்தை நினைவுகூறச் செய்தது. அதன்பின் ஆரோக்கியம் தொடர்பான தேடல் அதிகரித்தது. 

2011 இல் எனது இடது காலில் இருந்த சேற்றுப்புண் விரிவடைந்து யானைக்கால் வியாதி வந்தது போல ஆகிவிட்டது. அப்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதித்து பார்த்தபோது வெறும் வயிற்றில் 450 என்று காட்டியது. ஒரு வாரம் கழித்து பார்த்தபோதும் வெறும் வயிற்றில் 400 மேல் தான் காட்டியது. ஆங்கில மருத்தவரிடம் சென்றால் அறுவை சிகிச்சை செய்து காலை வெட்டிவிடுவர் என்பதை நன்கு அறிந்திருந்தேன். 

நான் பொதுவாக நேர்மறையாக சிந்திக்கும் குணமுடையவன். எனவே இந்த தொந்தரவிற்கான மூல காரணத்தை அறிய முற்பட்டேன். பொதுவாக நாம் எதை சிந்திக்கிறோமோ அதுவே நடக்கும். சாப்பிடும்போது நிறைய நீர் அருந்தும் பழக்கம்தான் எனது உடலில் ஏற்பட்ட தொந்தரவிற்கான மூலகாரணம் என்பதை அறிந்துகொண்டேன். பசிக்கும்போது மட்டும் நிதானமாக உண்ணும் பழக்கத்தை கடைபிடித்தேன். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட எனக்கு அன்றுவரை இருந்த பல உடல் உபாதைகள் மறைந்துவிட்டன. அன்றுவரை எனக்கு இருந்த உடல் உபாதைகள்

 • அடிக்கடி பசியும் தாகமும் எடுத்துக்கொண்டே இருக்கும்.
 • உணவு உண்டபின் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருக்கும்.
 • உடல் எப்போதும் சோர்வாகவே காணப்படும்.
 • உணவு உண்டவுடன் அதை ஜீரணிக்க சக்தியில்லாமல் தூக்கம் வந்துவிடும். அவ்வாறு தூங்கும்போது உணவு முழுமையாக செரிமானமாகி உடலில் சேர்ந்து எடை அதிகரிக்கும்.
 • இரவு தூங்கி எழுவதற்குள் பத்து முறையாவது சிறுநீர் கழிக்க நேரிடும்.

இத்தகைய தொந்தரவுகளில் இருந்தும் சில நாட்களிலேயே விடுபட்டுவிட்டேன். அப்போதுதான் உணவு சரியாக ஜீரணம் ஆகாததுதான் இத்தனை உபத்திரவங்களுக்கும் அடிப்படை காரணம் என்பதை உணர்ந்தேன். இவற்றில் இருந்து விடுபட எனக்கு எந்த வித மருந்தும் உணவுக் கட்டுப்பாடும் தேவைபடவில்லை. இதனை புரிந்துகொள்ளாமல் தான் ஆங்கில மருத்துவம் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) என்று பெயர் வைத்து காலத்திற்கும் மருந்து மற்றும் உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்ற சொல்கிறார்கள் என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். 

அதன்பின் எனது தேடல் விரிவடைந்தது. இன்றுவரை ஆங்கில மருத்துவத்தில் இத்தகைய தொந்தரவிற்க்கான காரணத்தை அறியவில்லை என்றும் அவர்கள் மருத்துவத்தின் மூலம் இவற்றை தடுக்கவோ குணப்படுத்தவோ முடியாது என்று தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கம் ஆங்கில மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இதுமட்டுமல்ல வாழ்நாள் முழுக்க எவற்றிற்கெல்லாம் மருந்து உண்ணக்கொடுக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என “மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940) Schedule J என்னும் பிரிவில் ஆங்கிலேயர் காலத்திலேயே சட்டம் இயற்றியுள்ளனர். 

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் கருதி இதன் நகலை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து படிக்கும் வகையில் நம் இந்திய அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இந்த சட்ட நகலை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுத்துள்ள லிங்க்கிற்கு செல்லவும்.


அல்லது https://www.google.com இல் "Drugs and Cosmetics Act, 1940" என்று தேடவும். தேடலின் முதல் முடிவே அதன் நகலாகத்தான் இருக்கும். அதை பதிவிறக்கம் செய்து "Schedule J" என்று தேடினால் கிடைக்கும். அல்லது பக்கம் 129 மற்றும் 377 ஐ பார்க்கவும்.

"Search Drugs & Cosmetic Act 1940 in google.com First result will this pdf file) and Search for "Schedule J" or directly read from pages 129 and 377.

அனைவரின் நலன் கருதி நோய்களின் பெயர் தமிழாக்கம் செய்து எனது வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளேன். அந்த பதிவை காண இங்கு செல்லவும் http://goo.gl/RG6zwU

வியாபார நோக்கில் இந்த சட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் இருக்கின்றார்கள் என்கிற உண்மையை உணர்ந்துகொண்டேன். மருத்துவம் வியாபாரமாகாமல் இருந்தால் இவ்வாறு நிகழாது எனத் தோன்றியது. ஒரு மாற்றத்தை கொண்டுவர விரும்பினேன். அதை என்னிடமிருந்தே ஆரம்பித்தேன். முதலில் மாற்று உணவு மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை கொடுப்பதற்கு பதில் எனது வாடிக்கையாளர்களிடம் தினசரி வாழ்வில் செய்யும் சில தவறுகளை திருத்த அறிவுறுத்தினேன். அவர்களது உடல்நிலையில் நல்ல மாற்றங்களை உணரமுடிந்தது. பின்னர் மருத்தவம் தொடர்பாக யாரிடமும் எந்தவித பண பரிமாற்றத்தையும் வைத்துக்கொள்வதில்லை என முடிவெடுத்தேன். மக்களுக்கு உடலின் இயக்கத்தை புரியவைத்தாலே மருத்துவ வியாபாரிகளிடமிருந்தும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளிலிருந்தும் தப்பித்துக் கொள்வார்கள் என தோன்றியது. அன்று முதல் இன்றுவரை உடலியல் தொடர்பான தெளிவையும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன்.

நமது உடலில் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளுக்கும் நம் தினசரி வாழ்க்கைமுறையில் செய்யும் சிறு தவறுகள் தான் காரணமென்றும் அதை திருத்திக்கொண்டாலே இவற்றில் இருந்து எளிதில் விடுபடலாம் எனவும் தெரிந்துகொண்டேன். இதை அனைத்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணினேன். இதற்கு முகநூல் பக்கம் (Regha Health Care), Whatsapp மற்றும் வலைத்தளம் உதவியாக இருந்து வருகிறது. 

இதுவரை நான் பார்த்த, படித்த, சிந்தித்த, உணர்ந்த அனுபவங்களை இந்த தொடரின் மூலம் அனைவரிடமும் பகிர்கிறேன்.

நீங்கள் மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும். நம் தவறான வாழ்க்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தரமான தீர்வை தர இயலாது. உங்கள் வாழ்க்கைமுறையை சரிசெய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும். அதற்கான வழிமுறைகளை காண http://goo.gl/lC56N5 செல்லுங்கள்.

இதில் கொடுக்கபட்டுள்ளவற்றை படித்து புரிந்துகொண்டு பின்பற்றுங்கள் நல்ல பலன் கிடைக்கும். படித்தபின் ஏதேனும் சந்தேகம் எற்பட்டால் என்னிடம் தொடர்புகொண்டு அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளலாம். 

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

 


நான் பொறியியல் படித்ததால் ஆரோக்கியம் தொடர்பாக எந்தவித அடிப்படை ஞானமும் இல்லாமல் இருந்தேன். எனது உறவினர் மூலம் தான் மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்களை வியாபாரம் செய்யும் அந்த தனியார் நிறுவனம் அறிமுகமானது. அங்கு ஆரோக்கியம் தொடர்பாக நான் கற்றுக்கொண்ட அடிப்படை விஷயங்களாவன 

# நமது உடலின் ஏற்படும் அனைத்து தொந்தரவுகளின் அடிப்படை காரணமாக விளங்குவது நமது குடலில் தேங்கும் கழிவுகளே. எனவே தான் நம் முன்னோர்கள் விளக்கெண்ணை குடித்து குடலை சுத்தம் செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். 

# நம் குடலில் தேங்கும் கழிவுகளே உடலின் மற்ற பகுதிகளில் தேங்கி வலியை ஏற்படுத்துகின்றது. நம் உணவில் நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை (பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை) உட்கொள்ளும் பட்சத்தில் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள வலிகள் குறைகின்றது. 

# பசித்து உட்கொள்ளும் உணவுகள் எளிதில் செரிமானமாகி விடுகிறது. பசிக்கும்போது நமக்கு பிடித்தமான உணவுகளை உண்ணுவதன் மூலம் உடலிற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து அனைத்து உறுப்புக்களும் நன்கு இயங்குகிறது. 

இதன் அடிப்படையில் தான் அந்த நிறுவனத்தில் மாற்று உணவுகள் மற்றும் ஆயுர்வேத மருந்துக்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதன்மூலம் உடலில் கழிவுகள் தேங்கியதால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறைந்தது. மேலும் சத்துக்குறைபாடுகள் நீங்கியது. 

அதேநேரத்தில் உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் ஏற்பட்ட தொந்தரவுகள் (கல்லீரல் மற்றும் இருதயம் போன்ற பகுதிகளில் ஏற்படுபவை), சுத்தமான காற்றினை சுவாசிக்காததினால் ஏற்பட்ட தொந்தரவுகள் (நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற பகுதிகளில் ஏற்படுபவை) போன்றவற்றிற்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்தது. 

இந்த மாற்று உணவுகளின் விலை சற்று அதிகமாகவே இருக்கும். எனவே ஆங்கில மருத்துவத்துக்கு மாற்றாக இதனை வாங்கும் ஏழைகள் மற்றும் நடுத்தரவர்கத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் யாரும் என்ன காரணத்தால் தங்களுக்கு உபத்திரவங்கள் ஏற்படுகின்றது என்பது தெரியாது. எனவே அதனை திருத்திக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் காலத்திற்கும் ஆங்கில மருந்துக்களை உட்கொள்ளுவதைப் போல இதையும் உட்கொள்ள வேண்டி இருந்தது. 

நம் உடலில் ஏற்படும் தொந்தரவிற்கான காரணத்தை அறிந்துகொண்டபின் எனது வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வியாபார நோக்கத்தில் தான் நான் கூறுவதாக எண்ணினர். அனைவரின் தேடலும் உடனடியாக கிடைக்கும் தற்காலிக தீர்வை நோக்கியே இருந்தது. இது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்தது. ஏனென்றால் நான் பணத்திற்காக வேலைபார்ப்பவன் அல்ல, திருப்திக்காக வேலைபார்ப்பவன். என்னை வியாபார கண்ணோட்டத்தில் பார்த்ததால்தான் நான் கூறிய விஷயங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை என்பதனை புரிந்துக்கொண்டேன். இந்த நிகழ்வும் நான் வியாபாரத்தில் இருந்து சேவைக்கு மாற காரணமாக இருந்தது. 

ஆரம்பத்தில் Regha Health Care என்னும் முகநூல் குழு தொடங்கப்பட்டது வணிக நோக்கத்தில் தான். பொதுவாகவே முகநூலில் ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள் தவிர்த்து எனது சுய புகைப்படம் முதற்கொண்டு வேறெதுவும் பகிரும் பழக்கம் எனக்கில்லை. 2015 ஆம் ஆண்டு எனது பிறந்தநாளில் நான் ஏன் இந்த குழுமத்தை ஆரம்பித்தேன் என்று ஒரு சுயநிலை விளக்க பதிவை http://goo.gl/10cR5i பகிர்ந்தேன். அதனை 39 பேர் பகிர்ந்திருந்தனர், 1,200 பேர் Like செய்திருந்தனர் மற்றும் 470 பேர் தங்களது வாழ்த்துக்களை Comment இல் பதிவு செய்திருந்தனர். இன்னும் பலர் இன்பாக்ஸ் மற்றும் ஈமெயில் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதில் 95 சதவிகிதம் மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. அப்போது தான் நல்ல விஷயங்களை செய்பவர்களுக்கு மக்களின் ஆதரவு உண்டு என்பதை புரிந்துக்கொண்டேன். இதன் பின் எனக்கு பல பொறுப்புக்கள் இருப்பதை உணர்ந்துகொண்டேன். 

அன்று முதல் நான் பகிரும் பதிவுகளின் தரம் மற்றும் உண்மைத்தன்மையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஒவ்வொரு பதிவின் முடிவிலும் என்ன காரணத்திற்காக இவற்றை பகிர்ந்தேன் என்கிற விளக்கத்தையும் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தற்செயலாக ஏதேனும் பதிவுகளை காண்போருக்கும் ஆரோக்கியம் தொடர்பான அறிமுகம் கிடைக்க வாய்ப்பாக அமையும் என்று எண்ணினேன். 

உண்மையில் அனைவரும் நினைப்பதுபோல ஆரோக்கியம் என்பது மருத்துவமனையிலோ மருந்துக்களிலோ கிடைப்பதில்லை. நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது. ஆரோக்கியம் நம்மோடே தான் இருக்கிறது. நம் உடலின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தாலே போதும் ஆரோக்கியம் நம்மோடே இருக்கும். ஆரோக்கியத்தை புரிந்துகொள்வதிலும் ஒரு சூட்சமம் இருக்கிறது என்பதை என்னால் உணரமுடிந்தது. 

ஆரோக்கியமாக வாழ்வதென்பது ஒரு வரம். இந்த வரம் அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. யாரெல்லாம் நேர்மையாக வாழ்கிறார்களோ, பொதுநலமாக சிந்திக்கிறார்களோ, உதவும் மனப்பான்மையுடன் இருக்கிறார்களோ, அடுத்தவர்களது பொருளுக்கு ஆசைபடாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஆரோக்கியம் என்றால் என்ன என்பது புரிகிறது. இத்தகையவர்களால் மட்டுமே தங்களது வாழ்க்கை முறையில் செய்யும் தினசரி தவறுகளை திருத்திக்கொள்ள முடிகிறது. மற்றவர்களால் இவற்றை புரிந்துக்கொள்ள முடிவதில்லை; அப்படி புரிந்துக்கொள்ள முடிந்தாலும் தங்களது வாழ்க்கை முறையில் செய்யும் தினசரி தவறுகளை திருத்திக்கொள்ள முடிவதில்லை. 

பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 

நம் உடலின் அடிப்படையை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே மக்களை வியாதிகளின் பயத்தில் இருந்து தெளிவுபடுத்த முடியும். ஏற்கனவே இத்தகைய விஷயங்களை சிலர் தங்கள் பாணியில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். 

# உடலின் அடிப்படையை ஹிலர் உமர் பாருக் எழுதிய உடலின் மொழி, உணவோடு உரையாடு, உடல்நலம் உங்கள் கையில் போன்ற பல நூல்களின் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார். 

# நோய்களைப்பற்றி பயத்தை போக்க ஹிலர் பாஸ்கர் எழுதிய அனாடமிக் தெரப்பி நூல் உதவியாக இருக்கும். 

# ஆங்கில மருத்துவத்தின் தில்லுமுல்லுக்களை முன்னாள் ஆங்கில மருத்துவர் பஸ்லூர் ரஹ்மான் தான் எழுதிய அத்தனை நூல்களிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். 

# நோய் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றிய உண்மைகளை “மருத்துவ ஆய்வு கூடங்களில் நடப்பது என்ன?” மற்றும் “தடுப்பூசிகள் வெளிப்படுத்தும் உண்மைகள்” என்னும் நூல்கள் மூலம் ஹிலர் உமர் பாருக் வெளிப்படுத்தியுள்ளார். 


குறிப்பு: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்களை படிக்க மட்டும் அறிவுறுத்துகிறேனே தவிர சிகிச்சை எடுத்துக்கொள்ள அல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மின் புத்தகங்கள் தேவைப்பட்டால் உங்கள் ஈமெயில் விலாசத்தை எனது எண்ணுக்கோ, ஈமெயிலுக்கோ அனுப்புங்கள் புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். 

என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமாக வாழவிரும்புபவர்கள் அத்தனைபேரும் இந்த நூல்களை அவசியம் படிக்க வேண்டும். 

வியாதிகள், கிருமிகள், சத்துக்கள் பெயரை சொல்லி பலவித வியாபாரங்கள் நம்மைச்சுற்றி நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. நமது உடலின் அடிப்படையை புரிந்துகொண்டாலே எதைக்கண்டும் அஞ்சாமல் வாழமுடியும். 

தொடரும்...


சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்? இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது. Regha Health Care முகநூல் பக்கத்தின் அனைத்து பதிவுகளையும் internet browser மூலம் முகநூலில் காண இங்கு https://goo.gl/Y5exqT செல்லவும்.


நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும். 

நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை. என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மற்றும் மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் மட்டும் இந்த எண்கள் +919840980224, +919750956398 மற்றும் vineeth3d@gmail.com க்கு தொடர்பு கொள்ளவும்.

சுயநலமாக சிந்திப்போர் மற்றும் மருந்துக்களால் மட்டுமே வியாதிகளை குணப்படுத்த முடியும் என எண்ணுபவர்கள் என்னை தொடர்புகொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


Saturday, August 18, 2018

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஆரோக்யமாக வாழ எளிதான வழிகள்

ஆரோக்யமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருபவர்களுக்கு இந்த facebook பக்கங்களும் வலைதளமும் உதவும்."கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்"


திருக்குறள் (அறிவுடைமை#0423)

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"


தெளிவுரை:

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம். 

நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.


உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]


1. பசி:
 • பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும்.
 • பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி மற்றும் உடலெங்கும் வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம், புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், மூலம், மாரடைப்பு,... போன்ற பல தொந்தரவுகள் ஏற்படுத்தும். அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும்.
 • நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும். பல் முளைத்த குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுப்பதை நிறுத்தினாலே நன்கு பசி எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிடும்.

2. உணவின் அளவு:
 • நாம் எவ்வளவு உணவு உண்ண வேண்டும் என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. சாப்பிடும்போது நாம் உண்ணும் உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு (திகட்டுதல்) வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.
 • விரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதிகமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக மெதுவாக மென்று சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் உண்ணும்போதே 10 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது, நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும். 
 • இவற்றை முயற்சி செய்து பார்த்ததில் எனக்கு (வினீத்) சில மாதங்களில் 20 கிலோ (From 93 to 73) வரை எடை குறைந்து விட்டது.

3. உணவை உண்ணும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:
 • சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது நமது உள்ளுறுப்புக்கள் தூண்டப்பட்டு அவை உணவை கிரகித்துக்கொள்ள தயாராகிவிடும்.
 • உணவில் ஆறு சுவைகள் [இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். யாருக்காகவும் எந்த சுவையையும் தவிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
 • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். சுவை நாக்கால் உறிஞ்சப்பட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். சுவையாகவே இரைப்பைக்கு செல்லும் உணவு தான் நமது உடலுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.
 • திட ஆகாரமாக (Solid food) இருந்தாலும் சரி நீர் ஆகாரமாக (Liquid food) இருந்தாலும் சரி அதன் வெப்ப தன்மை அல்லது குளிர்ச்சி தன்மை (Hot or Cold) நம் நாவிலே சமப்படுத்தப்பட வேண்டும். நம் தொண்டைக்கு செல்லும்போது வெப்பமாகவோ குளிர்ச்சியாகவோ இருக்கக் கூடாது. (வெப்பமாக சென்றால் இரைப்பையை பாதிக்கும் குளிர்ச்சியாக சென்றால் மாரடைப்பை ஏற்படுத்தும்)
 • சாப்பிடும்பொழுது நமது கவனம் சிதறாமல் இருப்பதற்கு நமது கண்களை மூடி, உதட்டை மூடி உண்ணலாம். பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 • முடிந்தவரை சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். கால்களைத் தொங்க வைத்துக் கொண்டோ, நின்றுக் கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
 • முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் (10 நிமிடமாவது) முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் (உணவில் காரமோ உப்போ அதிகமானால்) சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி.
 • குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகோ அல்லது நன்கு பசித்த பிறகோ சாப்பிடலாம். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.
 • மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை பசிக்கும்போது ரசித்து ருசித்து உண்டால் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

நீர் [நீர்] [சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

 • நீரை வடிகட்டி குடிப்பதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுக்காக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.
 • மண்பானையில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி அது காலிட்டராக ஆகும் வரைக் கொதிக்க வைத்து ஆறவைத்துக் குடிக்கும் பொழுது அந்த நீர் உடலில் பலவித நோய்களைக் குணப்படுத்தும் ஒரு மருந்தாக மாறுகிறது. 
 • தண்ணீரை எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திரங்களில் ஊற்றி கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது. அப்படிக் குடிக்கும்பொழுது அதில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆவியாகிவிடுகிறது. இந்த நீரால் உடலுக்குத் தீங்கு தான் விளையும்.
 • தண்ணீரில் உள்ள நீர்ச்சத்து தாகத்தைப் போக்குவதோடு ஆரோக்கியத்தையும் நம் உடலில் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவோம்.
 • மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தினால் அதிலுள்ள நீர்ச்சத்துக்களை இழக்க நேரிடும். அப்படி குடிக்க நேர்ந்தால் நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [பிரெஷ் ஜூஸ்] போன்றவற்றை பருக வேண்டும். 
 • தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல் தாகம் எடுக்கும்போது உடனே தேவையான அளவு தண்ணீரை நிதானமாக வாய்வைத்துக் குடிக்க வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக்கூடாது (அப்படி குடிக்கும்போது தேவையை விட பலமடங்கு நீரை குடிக்க நேரிடுவதால் நமது சிறுநீரகம் பாதிக்கப்படும்).
 • சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
 • நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,... ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும். 
 • பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். 
 • நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும் (Osteoporosis, Low Bone Mineral Density), எலும்புத் தேய்மானம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக கற்கள், தலை முடி உதிர்தல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.


# இயற்கை காற்றோட்டம் இல்லாத இடத்தில் தூங்கும்போது, 

# இரசாயண கொசுவிரட்டிகள் இருக்கும் இடத்தில் தூங்கும்போது, 

# நாம் சுவாசிக்கும் காற்றையே மறுபடியும் மறுபடியும் சுவாசிக்கும் சுழலில் (பூட்டிய அறையில், தலையை போர்த்திக்கொண்டு தூங்குவது) தூங்கும்போது விஷக்காற்று நமது உடலில் பரவி சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு, கர்ப்பையில் தொந்தரவுகள், விதைப்பையில் தொந்தரவுகள், ஆண்மை மற்றும் பெண்மை இழப்பு, மலட்டுத்தன்மை, மூட்டு வலிகள், உடல் சோர்வு,... போன்ற பல இன்னல்களை உருவாக்கும்.


ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

 • அலாரம் வைத்து எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி எழுந்தால் நாம் எப்போதுமே களைப்பாகவும், எரிச்சலுடனும், உடல் வலியுடனும் வாழவேண்டியிருக்கும்.
 • இரவு சீக்கிரமாக படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது சாத்தியப்படும். நாம் இரவு கண்விழித்து தொலைக்காட்சி, கணினி, செல்போன் மற்றும் சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது போன்ற தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு தானே.
 • எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்கவேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரத்திற்கு முன்பாக நாம் படுக்கைக்கு செல்லவேண்டும்.
 • முடிந்தவரை இரவு 10 மணிக்குள் தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.
 • இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
 • படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
 • தெற்க்கு அல்லது கிழக்கில் [South or East] தலை வைத்துப்படுப்பது மிகவும் நல்லது. அப்படி படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும். வடக்கே [North] தலை வைத்து படுப்பது நல்லதல்ல. அப்படி படுத்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலில் கழிவுகள் தேங்கிவிடும் அதனால் உடலில் ஆங்காங்கே வலிகள் ஏற்படும்.
 • தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
 • புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். 
 • படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
 • குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். 
 • இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். 
 • தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
 • நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும் மற்றும் இருதயம் தொடர்பான தொந்தரவுகள் மற்றும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
 • இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. 
 • தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.
 • டுவா தூக்கம் எனும் ஆழ்ந்த தூக்கத்தின் மூலமாக நமது உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
 • நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பதுபோல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவோம்.
 • இரவு தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபஞ்சர் மருத்துவத்தில் DU 20 என்று கூறுவார்கள்.
 • இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.


காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]

 • புகைபழக்கம், கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். 
 • கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க] 
 • வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். 
 • தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
 • தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க] 
 • மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் தரமான கொசுவலையை வாங்கி மாட்டிக்கொள்ளுங்கள். 
 • சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா... போன்ற பல வியாதிகள் உண்டாகும். 
 • சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.உழைப்பு [நெருப்பு] [இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] 

 • பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். 
 • உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும். 
 • தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். 
 • இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். 
 • உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். 
 • தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. 
 • காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். 
 • காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும். 
 • எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை. 


பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம். 


(குறிப்பு: நான் ஒரு மருத்துவர் அல்ல. அதே நேரத்தில் எந்த ஒரு மருத்துவத் துறையையும் சார்ந்தவரும் அல்ல. Regha Health Care என்று எந்த அலுவலகமோ மருத்துவமனையோ கிடையாது. 

நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும். 

என்னிடம் மருந்துக்களை எதிர்பார்க்காதீர்கள் ஆரோக்கியத்தை மட்டும் எதிர்பாருங்கள். ஆரோக்கியமாக வாழ வழிகாட்டி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவே இந்த முகநூல் பக்கம் மற்றும் குழுவினை உருவாக்கியுள்ளேன்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்)


குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். 


ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?

இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

மருந்துக்களின்றி ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இலவசமாக ஆலோசனைகள் பெற கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ / முகநூல் பக்கத்திலோ /வலைத்தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

(குறிப்பு: தயவுசெய்து பொறுமையாக இருப்பவர்கள், நேர்மையாக வாழ்பவர்கள் மற்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாதவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்)


மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:


Thanks & Regards,
       Vineeth.S

+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

Regha Health Care
(A Non-Profit Organization) 

Whatsapp No. 9840980224
Telegram No. 9840980224