தடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது யார்..! யார்..?

தடுப்பூசிகளின் கேவலமான பின்னணியில் இருப்பது 
யார்..! யார்..?



இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்..!

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் மட்டுமல்ல; “பிக் பார்மா” என்றழைக்கப்படும் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களான மெர்க், ஃபைசர், கிளாக்சோ ஸ்மித் கிளைன் ஆகியவற்றில் பில் கேட்ஸ் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

மேற்கத்திய ஏகபோக மருந்து நிறுவனங்களின் இலாப சதவீதம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அது குறித்து ஆய்வு செய்த மெக்கன்சி நிறுவனம், “மேற்கத்திய நாடுகளில் அமலில் உள்ள தரக் கட்டுப்பாடு சட்டங்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்குமான செலவுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறி, “இந்தச் செலவைக் குறைப்பதற்கு வேறு புதுமையான வழிகளை மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கியது”.

இதனடிப்படையில் புதிய மருந்துகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க குடிமகன்களுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பதைவிட, ஏழை நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் உடம்பில் செலுத்திப் பரிசோதித்துப் பார்ப்பதை இலாபகரமானதாகவும், மேற்கத்திய தரக் கட்டுப்பாட்டு சட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாகவும் ஏகபோக மருந்து கம்பெனிகள் கண்டு கொண்டன.

இதற்கு அப்பால், “நம்மை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மக்களைச் சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது” என்பதை அமெரிக்க ஏகபோக முதலாளியான ராக்பெல்லர் பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமது சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்து, அதனை தனது அறக்கட்டளையின் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்தியும் வந்திருந்தார்.

கேட்ஸ் அறக்கட்டளை பொது சுகாதார தளத்தில் இயங்குவதைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் தனது அறக்கட்டளையின் மூலமாக சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் கேட்ஸ் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. (Product Development Projects)) என்ற பெயரில் மருந்துப் பொருள் அபிவிருத்திக்கான திட்டங்களையும், (இந்தத் திட்டம் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாகச் செயல்படுத்தப்படும் பி.பி.பி. திட்டம் போன்றது) ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தி மருந்துகளைப் பரிசோதனை செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறது. மேலும், ஏழை நாடுகளின் அரசுகளின் சுகாதார கொள்கைகளைத் தமக்குச் சாதகமாக உருவாக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு ஏற்ப, அதிகார வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவிற்குப் பலமிக்க அரசுசாரா நிறுவனங்களையும் களத்தில் இறக்கியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் “ஒரு படையெடுப்புக்கு நிகரானது” (Chemical War) எனச் சொல்லத் தேவையில்லை.

2000-ம் ஆண்டுகளின் மத்தியில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் புதிய மருந்துகளுக்கான சோதனைகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்த ஆரம்பித்தது. 2010-ம் ஆண்டு கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மீது சோதித்தது. இந்தச் சோதனையின் விளைவாக 151 குழந்தைகள் இறந்ததுடன், 1,048 குழந்தைகள் முடக்குவாதம், வலிப்பு நோய் போன்ற கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டன. எனினும், இவ்வுண்மைகளை மறைத்து மருந்துப் பரிசோதனை பெரும் வெற்றி பெற்றதாகப் பிரச்சாரம் செய்து, உலகம் முழுவதும் அம்மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்திற்கு வாங்கித்தந்தது.

அதே போன்று ஆப்பிரிக்க நாடான சாட்-இல், குழந்தைகளின் மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கும் “மெனின்ஜெட்டிஸ்” (Meningitis) என்ற நோய்க்கு எதிரான தடுப்பூசியை அறிமுகம் செய்து, அதனைச் சந்தைப்படுத்துவதற்காக ‘மென் ஆஃப்ரி வாக்’ (MenAfriVac) என்ற இயக்கத்தையும் எடுத்தது, கேட்ஸ் அறக்கட்டளை. இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட 500 குழந்தைகளில் 50 குழந்தைகள் முடக்குவாதத்தில் வீழ்ந்தனர்.

ரொட்டாவைரஸ் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைக் கூடத்தை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) ஏற்படுத்தியுள்ள கேட்ஸ் அறக்கட்டளை, ரொட்டாவைரஸ் தடுப்பூசி தொடர்பான மருந்துகளை மேலும் வளர்த்தெடுக்கவும், அம்மருந்துகளை 10,000 பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தவும் பாரத் பயோடெக் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தடுப்பூசிகளை இந்திய அரசின் குழந்தைகள் நலத்திட்டத்துடன் இணைப்பதன் மூலம் அம்மருந்துகளுக்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்களை சந்தித்தப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வேறு பெயர்களில் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தலையில் கட்டும் கேட்ஸ் அறக்கட்டளையின் சதிச்செயல் ஏற்கெனவே அம்பலமான பிறகும் கூட இந்திய அரசு அதனுடனான தொடர்பைப் பேணுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையும், “பாத்” என்ற அரசுசாரா நிறுவனமும் இணைந்து, குஜராத்திலும், ஆந்திராவிலும் நடத்திய தடுப்பூசி முகாம்களில், ஹெச்.பி.வீ. என்ற கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை 23,000 பழங்குடியினச் சிறுமிகளுக்குச் செலுத்தின. இந்த தடுப்பூசி நோயைத் தடுப்பதற்குப் பதிலாக பாரதூரமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது. அத்தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய அயோக்கியத்தனம் பின்னர் விசாரணையில் அம்பலமானது.

இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ஸ் அறக்கட்டளையின் தொங்குதசையான பாத் நிறுவனம், பழங்குடியினச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இம்முகாம்களுக்கு இழுத்து வந்ததும், இம்மருந்தின் விளைவுகள் குறித்துப் பல பொய்களைப் பிரச்சாரம் செய்ததும் மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக் கொண்ட பல சிறுமிகளின் பெற்றோர்களின் கையெழுத்தை பாத் நிறுவன அதிகாரிகளே மோசடியாக போட்டிருப்பதும் நிரூபணமானது.

இம்மரணங்கள் குறித்து விசாரித்த நாடாளுமன்ற நிலைக்குழு, தனது அறிக்கையில், “மருத்துவ முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இவை, அங்கீகாரமற்ற தடுப்பூசிகளை மனிதர்கள் மேல் சோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளாகும்” என்பதை உறுதி செய்து, “இது சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகும்” எனச் சுட்டிக் காட்டியது. “ஒருவேளை இந்த அறக்கட்டளையின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்தில் கர்டாசில் தடுப்பூசியைச் சேர்த்திருந்தால், அது அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கு மிகப் பெரும் இலாபத்தை, ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்லும் அதிரடி இலாபத்தை, அள்ளித் தந்திருக்கும்” என்பதை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற நிலைக்குழு, “பொதுச் சேவை என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களின் வணிக நோக்கங்களுக்குச் சாதகமாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், இதுவரை கேட்ஸ் அறக்கட்டளை மீதோ, பாத் நிறுவனம் மீதோ எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையும் புதிய மருந்துகளைப் பரிசோதிக்கும் தனது கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிடவில்லை.

கேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாட்டு மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டும் பயன்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் கடும் பக்கவிளைவுகளின் காரணமாக போணியாகாமல் தேங்கிக் கிடக்கும் மருந்துகளைக் கொண்டுவந்து கொட்டும் சந்தையாவும் ஏழை நாடுகளைப் பயன்படுத்தி வருகிறது. கடும் பக்கவிளைவுகளின் காரணமாக நார்பிளாண்ட் என்ற கருத்தடை சாதனத்திற்கு (contraceptive) எதிராக அமெரிக்காவில் 36,000 வழக்குகள் தொடரப்பட்டதையடுத்து, நார்பிளாண்ட் அமெரிக்கச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இக்கருத்தடை சாதனத்தின் பெயரை ஜேடல் என மாற்றி, ஆப்பிரிக்காவில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் உதவியுடன் கேட்ஸ் அறக்கட்டளை சந்தைப்படுத்தி வருகிறது. “ஆப்பிரிக்க ஆண்கள் கருத்தடை சாதனங்கள் குறித்து அக்கறைப்படாததால், ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் தங்களுக்கு இந்த மருந்து நிச்சயம் தேவை என விரும்பிக்கேட்பதாகக் கூறி” பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் இந்த விற்பனையை நியாயப்படுத்தியிருக்கிறார். நார்பிளாண்டைப் போன்றே கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஃபைசர் நிறுவனத்தின் டிப்போ புரோவேரா மருந்தையும், மெர்க் நிறுவனத்தின் இம்ப்ளானோன் மருந்தையும் கேட்ஸ் அறக்கட்டளை தெற்காசிய, ஆப்பிரிக்க பெண்களிடையே விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

கருப்பை புற்றுநோயிலிருந்து பெண்களைக் காக்கக்கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம், கர்டாஸில் எனப் பெயரிடப்பட்ட அம்மருந்தை 2006-ல் அமெரிக்காவில் விற்பனைக் கொண்டு வந்தது. இம்மருந்தின் பக்கவிளைவுகள் அடுத்த மூன்றே ஆண்டுகளில் தெரியவந்த பிறகு, வருடத்திற்கு 150 கோடி அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த அம்மருந்தின் விற்பனை தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த மருந்தை யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான சர்வதேச கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை...!

என் ஏழை நாட்டு மக்கள், மேலை நாட்டு மருந்து கம்பெனிகளின் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டுமே இருக்கிறார்கள்..! 

இனியும் இதனை நாம் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறோமா..?? கேளிக்கைகளிலும், வேடிக்கைகளிலும் மூழ்கிக்கிடக்கும் என் இளைய சமுதாயமே உன்னுடைய கடமையை நீ என்றுதான் உணரப் போகிறாய்..!!!

இக்கட்டுரை, மும்பையிலிருந்து வெளிவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற ஆங்கில காலாண்டு இதழில் (எண்.57) வெளியான “கேட்ஸ் அறக்கட்டளையின் உண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை: அரிச்சுவடி” என்ற இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.


For more info visit:

https://www.facebook.com/ReghaHealthCare
https://www.facebook.com/VineethHealth
https://www.facebook.com/groups/reghahealthcare
http://reghahealthcare.blogspot.in


கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
    Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com

No comments:

Post a Comment